கொட்டுமுரசு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மோடி அரசாங்கம்!

இந்தியாவின் 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை கடந்தவாரம் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திருத்தம் மத்தியிலும் மாநில மட்டங்களிலும் தகவல் ஆணையாளர்களின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தியிருப்பதுடன் மத்தியில் சகல அதிகாரங்களையும் குவித்ததன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை அரித்திருக்கிறது.   பாரதிய ஜனதா கட்சியும் அதன் நேசக்கட்சிகளும் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் வலிமையான பெரும்பான்மையின் விளைவாக நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை காங்கிரஸ், திரிநாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கடுமையாக எதிர்த்தன. திருத்தம் தகவல் ஆணையாளர்களின் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருட பதவிக்காலத்தை நீக்குகிறது ...

Read More »

பேரம் பேசும் அரசியல் சக்தி! போரின் பின்னர் ஒலித்து வந்துள்ளது!

இலங்கை, இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதில், இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதன்மையானது. இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இலங்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தமிழ் மக்களின் தெரிவுகள் அறம் சார்ந்ததாகவோ, மக்கள் நலன் சார்ந்ததாகவோ இருந்ததில்லை. இம்முறையும், அறம் சார்ந்தும் வேலைத்திட்டம் சார்ந்தும் வாக்களிக்கும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. தமிழர்களின் தேர்தல் அரசியல், எப்போதும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது, ...

Read More »

நீதியை பலவீனப்படுத்தும் அரசியல் அதிகாரம்!

வடஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இரு வருடங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இந்தியாவின் வரலாற்றில் அடையாளச்சின்னமாக இடம்பெறப்போகிறது. .ஏனென்றால், அது சமூக அமைப்பில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் நீதித்துறையின் குறைபாடுகளின்  மையத்தே உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவின் பெரும்பாலான பாகங்களில் இளம் பெண்கள் மகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற கொடுமைகளை அது வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது ; பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பிரஜை ஒருவர் அதிகாரபலமுடையவருக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்வதற்கு நடத்தவேண்டிய நீண்ட போராட்டத்தை அது ...

Read More »

‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதூரம்!

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நிமிடம் வரை பதிலளிக்கவும் இல்லை; தான் தவறாகக் கூறிவிட்டதாக, மறுத்துரைக்கவும் ...

Read More »

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்!

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன்  வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 ...

Read More »

பேயும் பிசாசும்!

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இலங்­கையின் வர­லாற்றில் முக்­கிய கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் இக்­கட்­சிகள் மாறி மாறி ஆட்சி பீட­ மேறி இருக்­கின்­றன. இந்­நி­லையில் இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் போக்­குகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன.  ­கட்­சிகள் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உரி­ய­வாறு வலு­ சேர்க்­க­வில்லை. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைப் பெற்­றுக் ­கொ­டுக்­க­வில்லை என்­கிற பர­வ­லான குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. மலை­யக கட்­சிகள் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் ...

Read More »

பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா!

இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற  பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும்  உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது.   கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில்  பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­யத்­துவம்வாய்ந்தது.  அது மாத்­தி­ ரமன்றி, உலக ...

Read More »

தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’!

‘ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஐ.தே.க பெரும்பாலும், சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் வாய்ப்புகள் தென்படுகின்றன. கட்சிக்குள் அதற்கு முரணான கருத்துகள், ...

Read More »

சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு!

சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக இந்த முது­கெ­லும்பு விவ­காரம் மாறி­யுள்­ளது. அது என்ன முது­கெ­லும்பு விவ­காரம் என  எண்ணத் தோன்­றலாம்.   பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையே இந்த முது­கெ­லும்பு விவ­கா­ரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்­பமாக வெடிக்க வைத்­திருக்கிறார். இதனால் தெற்கு அர­சி­யலில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ள­தோடு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் பேரி­டி­யாக இந்த விவ­காரம் மாறி­யுள்­ளது. அப்­பாவி மக்கள் சிறிதும் எதிர்­பார்த்­தி­ராத மிகக் கொடிய துயரச்சம்­பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதி­வா­கியது. இந்த சம்­ப­வத்தில் 263 உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இன்னும் பலர் ...

Read More »

பறிபோகும் தமிழர் நிலங்கள்!

காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும். வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது. வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப,  நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனது பொருளாதார வளர்ச்சிச் சுட்டெண்ணை உயர்த்த முடியாத தலைவராக இனம் காணப்பட்டவர், தொடர்ந்தும் ...

Read More »