நீதியை பலவீனப்படுத்தும் அரசியல் அதிகாரம்!

வடஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இரு வருடங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இந்தியாவின் வரலாற்றில் அடையாளச்சின்னமாக இடம்பெறப்போகிறது.

.ஏனென்றால், அது சமூக அமைப்பில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் நீதித்துறையின் குறைபாடுகளின்  மையத்தே உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்தியாவின் பெரும்பாலான பாகங்களில் இளம் பெண்கள் மகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற கொடுமைகளை அது வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது ; பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பிரஜை ஒருவர் அதிகாரபலமுடையவருக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்வதற்கு நடத்தவேண்டிய நீண்ட போராட்டத்தை அது வெளிக்காட்டியிருக்கிறது ; அரசியல் அதிகாரத்தினால் எவ்வாறு சட்ட நடைமுறைகளின் அடிப்படை அம்சங்களைக்கூட பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்பதையும் அது அம்பலப்படுத்தியிருக்கிறது ;

அரசியல் அதிகார வகுப்பினரி்ன் தார்மீப் போலித்தனத்தை அது பகிரங்கப்படுத்தியிருக்கிறது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சாட்சிகளுக்கும் எதிராக வன்முறையை பயன்படுத்துவது  உட்பட அடாவடித்தனங்களைச் செய்து தனக்கு எதிராக சகல சான்றுகளையும் அழித்துவிடுவதற்கு துணிந்து நிற்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

உன்னாவ் சம்பவம் பற்றிய உண்மைகள் இப்போது நன்கு தெரிந்தவை. 2017 ஜூனில் இடம்பெற்ற பாலியல்  வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட   இளம்பெண் பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினரான குல்தீப் சிங் செங்காரையும் அவரது சகோதரரையும்  குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரின் முறைப்பாட்டைப் பதிவுசெய்த பொலிசார் அந்த கொடுமையைச் செய்தவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

2018 ஏப்ரிலில் அந்த பெண்ணின் தந்தையார் செங்காரின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டதாகவும் பிறகு பொலிசாரால் கைது யெ்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவர் இறந்துவிட்டார்.இவையெல்லாம் நடந்தது அந்த இளம்பெண் உத்தரப்பிரதேச முமலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வாசஸ்தலத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயற்சி மேற்கொண்ட பின்னரேயாகும்.அந்த சம்பவம் மக்களின் கவனத்தைப் பெற்றது.

மக்கள் குரலெழுப்பியதை அடுத்து முதல் தகவல் அறிக்கை பபதிவுசெய்யப்பட்டு வழக்கு மத்திய புலனாய்வு பணியகத்திடம் ( சி.பி.ஐ.) ஒப்படைக்கப்பட்டது. செங்கார் கைதுசெய்யப்பட்ட அதேவேளை, பாதிக்ப்பட்ட பெண்ணின் மாமனாரும் வேறு ஒரு பழைய வழக்கின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வார ஆரம்பத்தில் அந்த பெண் தனது மாமனாரை பார்ப்பதற்காக சிறைச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவரது காரை லொறியொன்று வந்து மோதியது.அதில் பெண்ணின் மாமியார் இருவர் பலியாகினர்.பெண்ணும் அவரது சட்டத்தரணியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

விசாரணை முழுமையாக முடியும்வரை, அந்த விபத்துக்கான காரணம் ஒரு சதித்திட்டமே என்று கூறுவது தவறாக அமையும்.ஆனால், தெரியவந்திருப்பது என்னவென்றால் ….. செங்காருக்கு ஒரு நோக்கம் இருந்தது ;  அத்தகைய விபத்து ஒன்றை  சிறைக்குள் இருந்தவண்ணமே ஏற்பாடு செய்வதற்கான வசதிகள் அவருக்கு இருந்தது ; பாலியல் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்துஅதிகாரிகளுக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்திருந்தார் ; அவரைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த காவலர்கள் சிறையில் இருக்கும் செங்காருடனும் அவரது கூட்டாளிகளுடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

காருடன் மோதிய லொறி சமாஜ்வாதி கட்சி அரசியல்வாதியொருவருக்குச் சொந்தமானது என்ற தகவல் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகிறது.செங்காருக்கு எதிராக  முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு சிபி.ஐ.யுக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டிக்கும் அதேவேளை, நடுநிலை அவதானியொருவர் ஊடாக மேல்நிலை நீதிமன்றம் கண்காணிக்கும் ஏற்பாட்டுடன் கூடிய சுயாதீன விசாரணையொன்று அவசியமாகும்.உன்னாவ் விவகாரம் மனிதகுலத்துக்கும் சட்டத்துக்கும் ஒரு சோதனையாகும்.

( இந்துஸ்தான் ரைம்ஸ் )