கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் காரணமாக இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் பாத்திரம் மீண்டுமொரு தடவை முக்கியய கவனத்தைப் பெற்றிருக்கிறது. பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறியே அந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும். அவரின் கடத்தல் தொடர்பாகக் கூறப்பட்ட விபரங்கள் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிசைவாக அமையவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால், ...
Read More »கொட்டுமுரசு
ஒற்றுமையின் அவசியம் !
தமிழ் மக்களின் ஏகோபித்த அர சியல் தலைமையாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளங் கிய போதிலும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமி ழரசுக் கட்சி அதன் பங்காளிக் கட்சிகளுடன் சம அந்தஸ்தும், சம உரிமையும் கொண்டதாகச் செயற்படவில்லை. தமிழரசுக் கட் சியின் வளர்ச்சியிலும், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதிலுமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்தியிருந்தது. நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஒரு முக்கியமான கால கட்டத்தை வந்தடைந்திருக்கின்றது. தமிழ் அரசியல் சக்திகள் அனைத்தும் ...
Read More »காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது என்கிறார் கோத்தா!
யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது. மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலிக்க குழுவொன்று அமைக்கப்படும். இதேபோன்றே ...
Read More »முட்டிக்கொள்ளும் வெளிவிவகார கொள்கை!
லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக அறிவித்து, தண்டப்பணம் செலுத்த உத்தர விட்டுள்ள விவகாரம், இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளில் உரசல்களை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுத்து விடுவது போல, சைகை மூலம் எச்சரிக்கை செய்திருந்தார், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ. இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பணியிலிருந்த அவரது இந்தச் செயல் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது, அவருக்கு ...
Read More »ஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு!
நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள புதிய சூழலில் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை விடயங்களும் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற பிரேரணையின் அடுத்த நிலை என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடருமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் அனைவரது கவனமும் ஜெனிவா மனித உரிமை பேரவைப் பக்கமே திரும்பியிருக்கிறது. காரணம் எதிர்வரும் மார்ச் ...
Read More »நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்!
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. ஹொங்கொங்கில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக ஆதரவுச் சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஹொங்கொங் நெருக்கடியில் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துவருகின்ற அணுகுமுறைக்கான அதிர்ச்சிதரும் வகையிலான ஒரு கண்டனமாக அமைந்தது ; மொத்தம் 18 மாவட்ட சபைகளில் 17 சபைகள் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. அந்த தேர்தலில் முன்னென்றுமில்லாத அளவுக்கு வாக்காளர்கள் பெருமளவில் ( 71 சதவீதத்துக்கும் அதிகம் ) கலந்தகொண்டனர். ...
Read More »பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை!
தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் ...
Read More »காதுகளைக் கொஞ்சம் பெரிதாக்குவோம்!
புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தேர்தல் முறை ...
Read More »2019 இல் உலக நாடுகளில் 250 பத்திரிகையாளர்கள் சிறையில்!
2019 இல் தங்கள் எழுத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது. சீனா பத்திரிகைகள் மீதான தனது இரும்புப்பிடியை மேலும் கடினமாக்கியுள்ளஅதேவேளை துருக்கி சுயாதீன செய்தியிடலை முற்றாக தடை செய்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் சிறையிலிருந்து விடுதலையான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல்முறையீடுகளையும் எதிர்கொண்டு காத்திருக்கின்றனர். ஏதேச்சதிகாரமும், ஸ்திரமற்ற தன்மையும், ஆர்ப்பாட்டங்களும் பல பத்திரிகையாளர்கள் மத்திய கிழக்கில் சிறைகளில் வாடும் நிலையை உருவாக்கியுள்ளது.குறிப்பாக சவுதி அரேபியாவில் இந்த நிலை காணப்படுகின்றது,உலகில் பத்திரிகையாளர்கள் அதிகளவு ...
Read More »13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்!
குடும்ப அரசியல் செய்கின்றார்கள் என எதிரணியினர் என்ன தான் மக்கள் மத்தியில் ராஜபக் ஷ அணியினரை பற்றி விமர்சனம் செய்தாலும் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதையெல்லாம் காதில் போடாமல் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தனர் மக்கள். எதிர்பார்த்தது போலவே தான் ஜனாதிபதியானவுடன் அண்ணன் மஹிந்தவை பிரதமராக்கினார் ஜனாதிபதி கோத்தாபய. தனது மற்றுமொரு அண்ணன் சமல் ராஜபக் ஷவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக்கினார். மக்களின் மெளனம் தொடர்கிறது. தேர்தல் காலத்தில் எதிரணியிடமிருந்து ஒலித்த குடும்ப அரசியல் கோஷங்களை இப்போது காணமுடியவில்லை. தேர்தல் ...
Read More »