செய்திமுரசு

சிறீலங்காவின் புதிய அரசியல் யாப்பு தமிழருக்கான சர்வரோக நிவாரணி!?

எஞ்சியிருக்கும் தமிழரையும் ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களுக்கு விமோசனம் வழங்கத் தயாரென மகிந்த அறிவித்துள்ளார். அவரது அகராதியில் விமோசனம் என்பதன் அர்த்தம் தமிழர்களை மறுஉலகுக்கு அனுப்பி வைப்பதே. இலங்கையில் இந்த மாதம் முதலாம் திகதி ஆங்காங்கே நடைபெற்ற மே தினக் கூட்டங்களின் முழக்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் ஏறுமாறாகவும், எதிர்கால எதிர்வுகூறலாகவும் எடுப்புத் தொடுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பித்தளை முலாம் பூசப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையிலான நீலக்கட்சி இரண்டு அணியாகப் பிளவுபட்டு, தமக்குள் மோதிக் கொண்ட மிகப்பெரிய பகிரங்க நிகழ்வாகவும் மாறிக் கொண்டது இதிலுள்ள முக்கியம். நீலக் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்ற மீண்டும் இணக்கப்பாடு

அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான ஒரு இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம்(4) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கமன் டேர்ன்புல்லுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னர் நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தம் முன்னர் செய்து கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மானஸ் மற்றும் நவுறு தீவுகளின் முகாம்களில் உள்ள 1200 அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பட்டிருந்தது.

Read More »

அவுஸ்ரேலியாவில் 10 ஆண்டுகள் தங்க பெற்றோர் விசா தயார்!

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும். $20,000 செலுத்தினால் 10 ஆண்டுகள் இங்கே தங்கலாம். அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை அவுஸ்ரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) எடுக்கவேண்டும். Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கான அமைச்சரவை அங்கிகாரத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.   கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால், நேற்று (04) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,   பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான அங்கிகாரத்தை, கடந்த மாதம் 25ஆம் திகதியன்று, அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் எங்களிடம் எவ்விதமான ஆலோசனையும் பெறப்படவில்லை. இதன் மூலம் சிவில் உரிமைகள் குறைக்கப்படுவதுடன், துஷ்பிரயோகத்துக்கும் சித்திரவதைக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.   அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய ‘கேசர்’ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற ‘கேசர்’ வகை மாம்பழங்கள் முதன்முறையாக அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றின் இனிய சுவைக்கு அங்குள்ள மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குளுமைப் பிரதேசமாக அறியப்படும் ஆஸ்திரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியாவும் உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை ...

Read More »

அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்பு!

அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாவதாக த நியுயோர்க் டைம்ஸ் இணைத்தளம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது. இதற்கமைய இலங்கையை சேர்ந்த பல அகதிகளின் விண்ணப்பங்களும் அவுஸ்ரேலியாவில் பரிசீலிக்கப்படாமல், நீண்டகாலமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் அதிக அளவில் சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு துரிதமாக அகதி அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது. இருந்தபோதும், இவற்றுள் 78 சதவீதமானவர்கள் கிறிஸ்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அகதி அந்தஸ்த்து வழங்கப்படும் போது ஏனைய மதத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை கூறப்பட்டுள்ளது. இதனால் தாய்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்க உள்ளான ஏனைய ...

Read More »

கொழும்பு – அவுஸ்ரேலியா இடையே நேரடி விமான சேவை விரைவில்!

இலங்கையர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு – மெல்போர்ன் இடையிலான விமான சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்பட்ட சேவைகளை மீளத் தொடங்க இரு நாடுகளும் இணங்கியிருப்பதாகவும், இதன்படி ஏ330 எயார்பஸ் ரக விமானம் மூலமான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், கொழும்பு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு அரசு உதவி!

அவுஸ்ரேலியா நாட்டின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை மிகவும் அதிகரித்திருப்பதையடுத்து முதன்முதலாக வீடு வாங்குவோர் பெரும் நிதி நெருக்கடியை சந்திப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டமொன்றை அரசு அடுத்த மாதம் Budget -நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவர் ஈட்டும் வருமானத்திற்கு வரி விதிக்கும் முன்பே அந்த சம்பளத்தின் அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை வீடுவாங்க அவர் சேமிக்கவும், அந்த சேமிப்பிற்கு அரசு வரி வசூலிப்பதில்லை என்பதாகவும் புதிய திட்டமொன்றை அரசு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

Read More »

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், ஊடக அடக்குமுறைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ். பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்னால் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி ...

Read More »

அனிதா, குப்புசாமி இசை நிகழ்ச்சி!

கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் அவுஸ்ரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள். நேரம் : காலை 11 ...

Read More »