அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் மத ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாவதாக த நியுயோர்க் டைம்ஸ் இணைத்தளம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.
இதற்கமைய இலங்கையை சேர்ந்த பல அகதிகளின் விண்ணப்பங்களும் அவுஸ்ரேலியாவில் பரிசீலிக்கப்படாமல், நீண்டகாலமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் அதிக அளவில் சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு துரிதமாக அகதி அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது.
இருந்தபோதும், இவற்றுள் 78 சதவீதமானவர்கள் கிறிஸ்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அகதி அந்தஸ்த்து வழங்கப்படும் போது ஏனைய மதத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை கூறப்பட்டுள்ளது.
இதனால் தாய்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்க உள்ளான ஏனைய மதத்தினர், அகதி அந்தஸ்த்து பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.