இலங்கையர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு – மெல்போர்ன் இடையிலான விமான சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்பட்ட சேவைகளை மீளத் தொடங்க இரு நாடுகளும் இணங்கியிருப்பதாகவும், இதன்படி ஏ330 எயார்பஸ் ரக விமானம் மூலமான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், கொழும்பு – அவுஸ்ரேலியா இடையிலான ஒரே நேரடி விமான சேவையாக இது இருக்கும்.
Eelamurasu Australia Online News Portal