அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான ஒரு இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம்(4) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கமன் டேர்ன்புல்லுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னர் நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா நிர்வாகத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தம் முன்னர் செய்து கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் மானஸ் மற்றும் நவுறு தீவுகளின் முகாம்களில் உள்ள 1200 அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பட்டிருந்தது.
Eelamurasu Australia Online News Portal