செய்திமுரசு

உமிழ்நீர் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை 15 நிமிடங்களில் கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:- ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை போன்றே இந்த பரிசோதனை திறம்பட செயல்படுகிறது.இந்த ஸ்மார்ட் போன் இயங்குதளம் எதிர்கால பயன்பாடாக அமையும் என்று நம்புகிறோம். கொரோனா பரிசோதனையை விரைவாக ...

Read More »

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட பல பகுதிகள் முடக்கப்படுகின்றது

மேல் மாகாணத்தில் பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளன. வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட கமபஹா மாவட்டத்தின் ஐந்து கிராமசேவகர் பிரிவுள், களுத்துறை மாவட்டத்தில் 3 பிரிவுகள் நாளை காலை முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம் பெறுகிறார்

அடிலெய்டில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டே-நைட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பெறுகிறார். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ், மார்கஸ் ஹாரிஸ், வில் புகோவ்ஸ்கி ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜோ பேர்ன்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால் ...

Read More »

கொரோனா தடுப்பூசி சோதனை: அவுஸ்ரேலியா அதிர்ச்சி!

அவுஸ்ரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி.க்கு சாதகம் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ரேலிய பயோடெக் நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை 216 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட ஆண்டிபாடிஸ், எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளை ஏற்படுத்தியதால் 4இல் ஒருவருக்கு எச்.ஐ.வி. சாதகம் என போலியான முடிவுகளைக் காட்டியது. 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட ...

Read More »

கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது?

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார்  ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் ...

Read More »

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலில் திருத்தங்கள்

வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் தனி மைப்படுத்தல் தொடர்பான பணியில் செய்யப்பட வேண் டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைகள் இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங் கையர்களின் நிலைமையைப் பொறுத்துத் தனிமைப் படுத்தப்பட்ட காலத்தைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார சுகாதார சேவைகளின் துணை அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரி வித்தார். சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைக் கருத்தில் கொ ண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

Read More »

கொழும்பில் 6 வீட்டுத் தொகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியிருப்பு தொகுதிகளில் சில, இன்று (12) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் அந்த குடியிருப்புத் தொகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என லெப்டினன் ஜெனரல் இராணுவத்தளபதி ஷ​வேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதன்பிரகாரம். மட்டக்குளிய ரந்திய உயன முகத்துவாரம் (மோதர) மென்சத உயன முகத்துவாரம் (மோதர) மிஹிஜய ​செவன கிராண்ட்பாஸ் முவதொர உயன கிராண்ட்பாஸ் சமஹிபுர தெமட்டகொட மிஹது சென்புர உயன அந்த வீட்டுத் தொகுதியில் வாழும் மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் ...

Read More »

24 மணி நேரத்துக்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும்

அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் உயரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ...

Read More »

சவுதியின் மதபோதகர்கள் இலங்கை முஸ்லீம்களின் மனதை மாற்றும் போதனைகளில்

சவுதிஅரேபியாவிற்கு செல்லும் இலங்கை முஸ்லீம்கள் அங்குள்ள மதபோதகர்ளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சவுதிஅரேபிய போதகர் ஒருவர் இலங்கை முஸ்லீம் ஒருவருக்கு போதிக்கும் காணொளி குறித்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட காணொளியில் காணப்படும் விடயங்கள் குறித்து ஏசிஜேயூ அமைப்பின் தலைவரிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட காணொளியில் சவுதிஅரேபிய மதகுரு இஸ்லாமை கைவிடுதல் கொலை செய்தல் போன்ற விடயங்கள் குறித்துகருத்து வெளியிட்டுள்ளார் என ஏசிஜேயூ அமைப்பின் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ...

Read More »

39 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன

இலங்கை முழுவதும் 10 காவல் துறை பிரிவுகள், 39 கிராம சேவகர் பிரிவுள் மற்றும் 04 தொடர்மாடி குடியிருப்புகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 09 காவல் துறை பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளன. அவையாவன: முகத்துவாரம்(மோதர), கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொட மற்றும் கொட்டாஞ்சேனை ஆகும். வேகந்த, வனாத்தமுல்ல, சாலமுல்ல, ஹுனுப்பிட்டி,60ஆம் தோட்டம் மற்றும் கோகிலா வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மாடிகளில் ரன்திய உயன, ...

Read More »