இலங்கை முழுவதும் 10 காவல் துறை பிரிவுகள், 39 கிராம சேவகர் பிரிவுள் மற்றும் 04 தொடர்மாடி குடியிருப்புகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 09 காவல் துறை பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையிலுள்ளன. அவையாவன: முகத்துவாரம்(மோதர), கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொட மற்றும் கொட்டாஞ்சேனை ஆகும். வேகந்த, வனாத்தமுல்ல, சாலமுல்ல, ஹுனுப்பிட்டி,60ஆம் தோட்டம் மற்றும் கோகிலா வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மாடிகளில் ரன்திய உயன, லக்சந்த செவன, பெர்குஷன் வீதி தெற்கு தொடர்மாடி ஆகியனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கம்பஹா மாட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் தலாதுவ வீதி தொழிலாளர் இல்ல வீட்டுத்திட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று காவல் துறை பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.