வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் தனி மைப்படுத்தல் தொடர்பான பணியில் செய்யப்பட வேண் டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைகள் இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங் கையர்களின் நிலைமையைப் பொறுத்துத் தனிமைப் படுத்தப்பட்ட காலத்தைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார சுகாதார சேவைகளின் துணை அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரி வித்தார்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைக் கருத்தில் கொ ண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இறுதி தீர்மானத்தை எடுப்பார் என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.
தற்போது வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனை வரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனி மைப்படுத்தல் நிலையங்களிலும் 14 நாட்கள் தமது வீடு களிலும் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் .
புதிய முறையின் கீழ், வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இலங்கையர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன் முடிவில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொ ற்று ஏற்படாத விடத்து, முன்பு நடைமுறையில் இருந் தவாறு அவர் மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப் படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சமூகத்தில் சுதந்திரமாகச் செல்ல அவர்களை அனு மதிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.