கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியிருப்பு தொகுதிகளில் சில, இன்று (12) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணி முதல் அந்த குடியிருப்புத் தொகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என லெப்டினன் ஜெனரல் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதன்பிரகாரம்.
மட்டக்குளிய ரந்திய உயன
முகத்துவாரம் (மோதர) மென்சத உயன
முகத்துவாரம் (மோதர) மிஹிஜய செவன
கிராண்ட்பாஸ் முவதொர உயன
கிராண்ட்பாஸ் சமஹிபுர
தெமட்டகொட மிஹது சென்புர உயன
அந்த வீட்டுத் தொகுதியில் வாழும் மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக கொவிட்-19 தொற்றொழிப்பு தேசிய மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal