சவுதிஅரேபியாவிற்கு செல்லும் இலங்கை முஸ்லீம்கள் அங்குள்ள மதபோதகர்ளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சவுதிஅரேபிய போதகர் ஒருவர் இலங்கை முஸ்லீம் ஒருவருக்கு போதிக்கும் காணொளி குறித்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட காணொளியில் காணப்படும் விடயங்கள் குறித்து ஏசிஜேயூ அமைப்பின் தலைவரிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
குறிப்பிட்ட காணொளியில் சவுதிஅரேபிய மதகுரு இஸ்லாமை கைவிடுதல் கொலை செய்தல் போன்ற விடயங்கள் குறித்துகருத்து வெளியிட்டுள்ளார் என ஏசிஜேயூ அமைப்பின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஷரியா சட்டத்தினை எப்படி பயன்படுத்துவது என குறிப்பிட்ட மதகுரு என சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் மதகுருக்களின் சிறிய போதனைகள் மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை, அவர் ஷரியா சட்டத்தினை எப்படி பயன்படுத்துவது என அறிவுiரு வழங்குகின்றார் என ஏசிஜேயூ அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட உரை இலங்கை முஸ்லீம்களிற்கு தமிழில் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறன உரைகளை தீவிரவாத போக்குடையவர்களை தூண்டுவதற்கு பயன்படுத்தலாமா என சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal