அடிலெய்டில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டே-நைட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பெறுகிறார்.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.
ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ், மார்கஸ் ஹாரிஸ், வில் புகோவ்ஸ்கி ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜோ பேர்ன்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார்கள் எனக் கருதப்பட்டது.
ஆனால் டேவிட் வார்னர் காயத்தால் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் புகோவ்ஸ்கி, மார்கஸ் ஹாரிஸ் இடையே போட்டி இருந்தது. புகோவ்ஸ்கி முதல் பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்தார்.
இதனால் மார்கஸ் ஹாரிஸ் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மேலும், இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளதால் உறுதியாக அணியில் இடம் பெறுகிறார். மேலும், உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இரண்டு போட்டிகளில் 355 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 118.33 ஆகும்.