செய்திமுரசு

இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமி

பிரித்தானிய நாட்டில் தாயை இழந்த சிறுமி ஒருவரின் கேள்வியால் இளவரசரான வில்லியம் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் Bedfordshire நகரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து வரும் மையம் ஒன்றிற்கு அந்நாட்டு இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் நேற்று விஜயம் செய்துள்ளனர். இதே மையத்தில் புற்றுநோயால் தாயை இழந்த 14 வயது வயது சிறுமி ஒருவர் இளவரசர் வில்லியமிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். புற்றுநோயால் எனது தாயை கடந்தாண்டு இழந்துவிட்டேன். இந்த ...

Read More »

சுன்னாகம் காவல்துறையினர் 5 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு

சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து காவல்துறையினருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி 5 இளைஞர்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தபோது அதில் சிறிஸ்கந்தராசா சுமணன் ...

Read More »

மைத்திரி அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெறவில்லையாம்

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த சமயத்தில் அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென சிறீலங்காவின் அதிபர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலித் திட்ட அமைச்சராக இருந்தபோது அத்திட்டத்தை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கையூட்டுக் கோரியதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, அவரது ஊடகப் ...

Read More »

அவுஸ்திரேலியா அணியின் கப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு

சிறீலங்கா  அணிக்கெதிராக மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலியா அணியின் கப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணி சிறீலங்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கப்டனாக உள்ளார். இவர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 0-3 என தோற்று ஒயிட்வாஷ் ஆனது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, நேற்றைய 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ...

Read More »

இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை வெளியிட்டது அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம்

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் இந்தியாவின் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டுள்ளது.  இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட்டுள்ளது.  இந்தக் கப்பல் விரைவில் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.  பொருட்செலவில் வாங்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்த ரகசியத்தை அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சிறீலங்கா வெற்றி

சிறீலங்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று(24)  நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சிறீலங்கா  அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் சேர்த்தது. துவக்க பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அடுத்து வந்த குசால் மென்டிஸ் ...

Read More »

எஸ்.எம்.ஈ.சி. – அவுஸ்திரேலிய நிறுவனம் லஞ்ச, ஊழல் மோசடியில்

எஸ்.எம்.ஈ.சி. என்ற  அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர். குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் இலஞ்சமாக  வழங்கப்பட்டது. இது அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்ற சுற்றுலா பயணி கைது

அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்றதுடன் மேலும் இருவரை காயப்படுத்திய பிரான்ஸ் நாட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகேயுள்ள ஹோம் ஹில் பகுதியில் இருக்கும் விடுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து பெண், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்துக்காரர் மற்றும் உள்ளூரை சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை  கருதுவதாக ...

Read More »

ஹாரிபாட்டர் அத்தியாயங்களை ஒப்பிக்கும் அவுஸ்திரேலிய இளம்பெண்

அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் ஹாரிபாட்டர் அத்தியாயத்தை மட்டும் கூறினால் போதும், அதன் முழு விபரத்தையும், அசாதாரணமாக ஒப்புவிப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது பிரிஸ்போன் நகரை சேர்ந்தவர் Rebecca Saharrock(26), இவர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சிறிதளவு கூட மறக்காமல் இருந்து வந்துள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். மேலும் இது சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். முக்கியமாக அவருக்கு பிடித்த ஹாரிபாட்டர் சம்பந்தமான கேள்விகள் எழுப்பினர். அதாவது ஹாரிபாட்டரில் உள்ள அத்தியாயத்தின் எண் ...

Read More »

சமூகவலைதளங்களை கலக்கும் 12 வயது சிறுவன்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் சமூகவலைதளத்தில் தன்னை ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் William Franklyn Miller(12) . இவருடைய புகைபடத்தை ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைபடத்திற்கு பகிர்வுகள் வெள்ளம் போல அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் குவிந்தன. மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாகவும், ...

Read More »