அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் ஹாரிபாட்டர் அத்தியாயத்தை மட்டும் கூறினால் போதும், அதன் முழு விபரத்தையும், அசாதாரணமாக ஒப்புவிப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
பிரிஸ்போன் நகரை சேர்ந்தவர் Rebecca Saharrock(26), இவர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சிறிதளவு கூட மறக்காமல் இருந்து வந்துள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர்.
மேலும் இது சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். முக்கியமாக அவருக்கு பிடித்த ஹாரிபாட்டர் சம்பந்தமான கேள்விகள் எழுப்பினர்.
அதாவது ஹாரிபாட்டரில் உள்ள அத்தியாயத்தின் எண் மட்டும் கூறி அதற்கான பதிலை கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த Rebecca Saharrock , விடையை ஒரு வரி கூட பிழை இல்லாமல் ஒப்புவித்ததை கண்டு பேட்டியாளர் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
குறிப்பாக பேட்டியாளர் அவரிடம் அத்தியாயம் 17 என்று கூறிய போது, ஒரு வார்த்தை கூட பிழை இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை ஒப்புவித்தார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: ஹைலி சுப்பீரியர் ஆட்டோபயா கிராபிகல் மெமரி (HSAM) என்ற வித்தியாசமான நோய் உள்ளதால் தான், தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் துல்லியமாக மறக்காமல் வைத்துள்ளார் Rebecca Saharrock என தெரிவித்தனர் .
மேலும், சிலர் Rebecca Saharrock க்கு இது வரமா அல்லது சாபமா என கூட தெரியவில்லை என்று கருத்துக்கள் கூறிவருகின்றனர்.
ஹாரி பாட்டர் புத்தகத்தின் தீவிரமான ரசிகையான Rebecca Saharrock , முதல் பாகம் மட்டுமல்லாமல் 7 புத்தகங்களையும் ஒப்புவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.