எஸ்.எம்.ஈ.சி. என்ற அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் இலஞ்சமாக வழங்கப்பட்டது. இது அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் அப்போது தெரிவித்திருந்தனர்.
ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, மைத்திரிபால சிறிசேன 1.8மில்லியன் டொலர் பெறுமதியான அணைக்கட்டின் ஒப்பந்தத்தை எஸ்.எம்.இ.சி. நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.
அண்மையில் பதவி விலக்கப்பட்ட எஸ்.எம்.இ.சி. நிறுவனத்தின் சிறீலங்கா மேலாளர், அவுஸ்திரேலிய அமைச்சருக்கும், ஒருங்கிணைப்புச் செயலாளருக்கும், தெரிவிக்க விரும்புவதாக தனது சகாக்களுக்கு இ-மெயில் எழுதியிருந்தார்.
அதில், இலஞ்சமாகப் பெறப்பட்ட பணமானது சில தேவைகளுக்காக பயன்படுத்தப்படவேண்டியிருந்தது எனவும், அது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சில பெயர் குறிப்பிட விரும்பாத கட்சிகளை முன்னுரிமைப்படுத்த வேண்டிய தேவை தனக்கிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் எஸ்.எம்.இ.சி நிறுவனமானது இது ஒரு ‘அரசியல் நன்கொடை கோரிக்கை’ என உறுதிபடத் தெரிவித்தது. ஆனால் உள்ளக விசாரணையில் இது நன்கொடை இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal