அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்றதுடன் மேலும் இருவரை காயப்படுத்திய பிரான்ஸ் நாட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகேயுள்ள ஹோம் ஹில் பகுதியில் இருக்கும் விடுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து பெண், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்துக்காரர் மற்றும் உள்ளூரை சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை கருதுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைதான வாலிபர் ஓராண்டு கால தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக காவல்துறை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal