அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியும் ஒன்று. இதில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு (விசாகப்பட்டினம்) கலந்துகொண்டு தங்கம் வென்றார். மேலும், இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் ...
Read More »செய்திமுரசு
தற்கொலை செய்ய நினைத்தேன்- அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்
ஓய்வு மற்றும் திருமண முறிவு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியதாக அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார். 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக தொகுத்து சுயசரிதை புத்தகத்தை நேற்று (31) வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ...
Read More »அவுஸ்திரேலியாவில் கஞ்சா வளர்க்க அனுமதி
கஞ்சாச் செடியை வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், பொறுப்பான அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா இறக்குமதிக்குப் பதிலாக அதை உள்ளூரிலே தயாரிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப் பொருள் சட்டத்தின் அண்மைய திருத்தம் கடந்த மாதம் செய்யப்பட்டது. அறிவியல், மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாச் செடியை வளர்ப்பதற்குச் சட்டம் அனுமதிக்கிறது. கஞ்சாவை மருந்தாக உட்கொள்கிறவர்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் சவால்களை எதிர்நோக்குவதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள திருத்தத்தால் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடு மேலும் சுலபமாகுதம் என்று அமைச்சு சொன்னது.
Read More »சரவாக் பூங்காவில் காணாமல் போன அவுஸ்ரேலியர்
சரவாக்கிலுள்ள பிரபல மூலூ தேசியப் பூங்காவில் காணாமல்போனஅவுஸ்ரேலிய சுற்றுப்பயணிக்கான தேடல் தொடர்ந்து நடைபெறுகிறது. 28 வயது ஆண்ட்ரூ காஸ்கெட் நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனார். அந்தப் பூங்காவிற்குள் அவர் தனியாகச் சென்றிருந்ததாகத் தெரியவந்தது. பூங்காவிற்குள் அவர் கடந்து சென்ற பாதையைப் பற்றிய விவரம் தெரியவில்லை. குகைகள், பூமிக்கு அடியிலுள்ள ஆறுகள், மலைப்பகுதிகள், கூர்மையான சுண்ணாம்புக் கற்கள் ஆகியவை அந்த பூங்காவில் உள்ளன. நேற்று தேடல், மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 40 பேர், மூலூ மலைச்சிகரம், புக்கிட் சுசு, ரேசர்ஸ் குகை ஆகிய ...
Read More »அவுஸ்ரேலியாவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள்
அவுஸ்ரேலியா நாட்டில் தீபாவளி திருநாளை அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆடல் பாடலுடன் வெகுவிமர்சையாக கொண்டாடினர். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தீபாவளி திருநாளை கொண்டாடினார்கள். செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். முன்னதாக மேளதாளம் முழங்க பெண்கள் தீபங்கள் ஏந்தியபடியே விருந்தினர்களை அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், ...
Read More »மட்டக்களப்பை சேர்ந்தவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா – வசந்தகுமார் (வயது48) என்பவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி பொன்னுச்சாமி ரஞ்சிதமலர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், ...
Read More »அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கு தடை
அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2007 முதல் 2013-ம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர். அங்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைந்தது. அதை தொடர்ந்து அங்கு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அகதிகள் அவுஸ்ரேலியாவுக்குள்ளும், அவர்களது படகுகள் கடல் ...
Read More »அவுஸ்ரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் நேற்று(30) தொலைபேசியில் பேசினார். அவுஸ்ரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் இந்தியர், மன்மீத் அலிசீர் (வயது 29). இவர் அங்கு கடந்த 28–ந் தேதி ஓடும் பஸ்சில் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். நல்ல பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்த மன்மீத் அலிசீரின் படுகொலை, அந்த இன மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி, அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் இன்று தொலைபேசியில் பேசினார். அவருக்கு தீபாவளி வாழ்த்துகள் ...
Read More »அவுஸ்திரேலியாவிற்கான புதிய இந்திய தூதர் நியமனம்
அவுஸ்திரேலியாவிற்கான புதிய இந்திய தூதராக டாக்டர் அஜய் எம். கொண்டனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐ.எப்.எஸ், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். கொண்டனே மிக விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »வடக்கில் அவதூறு பரப்பும் இணையத்தளம் ஒன்றுக்கு தடை
வடக்கில் நீதித்துறை தொடர்பாக பொய்யானதும், அவதூறு பரப்புவதுமான செய்தியை வெளியிட்டுவந்த தமிழ் இணையத்தளமொன்று நேற்றையதினம் சிறீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சின் முறைப்பாட்டிற்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார். ‘குறித்த இணையத்தளமானது, வடக்கில் நீதித்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் தொடர்பாக அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது ...
Read More »