சரவாக்கிலுள்ள பிரபல மூலூ தேசியப் பூங்காவில் காணாமல்போனஅவுஸ்ரேலிய சுற்றுப்பயணிக்கான தேடல் தொடர்ந்து நடைபெறுகிறது.
28 வயது ஆண்ட்ரூ காஸ்கெட் நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனார். அந்தப் பூங்காவிற்குள் அவர் தனியாகச் சென்றிருந்ததாகத் தெரியவந்தது.
பூங்காவிற்குள் அவர் கடந்து சென்ற பாதையைப் பற்றிய விவரம் தெரியவில்லை. குகைகள், பூமிக்கு அடியிலுள்ள ஆறுகள், மலைப்பகுதிகள், கூர்மையான சுண்ணாம்புக் கற்கள் ஆகியவை அந்த பூங்காவில் உள்ளன.
நேற்று தேடல், மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 40 பேர், மூலூ மலைச்சிகரம், புக்கிட் சுசு, ரேசர்ஸ் குகை ஆகிய இடங்களில் தேடினர். தேடல் குழு, வட்டாரவாசிகளின் உதவியையும் நாடியுள்ளது.
படகுகள், ஹெலிகாப்டர் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.
Eelamurasu Australia Online News Portal