அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கு தடை

அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் கடந்த 2007 முதல் 2013-ம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர். அங்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைந்தது. அதை தொடர்ந்து அங்கு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது.

அந்த சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அகதிகள் அவுஸ்ரேலியாவுக்குள்ளும், அவர்களது படகுகள் கடல் எல்லைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு தங்கியிருக்கும் அகதிகள் தங்களது சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்று குடியேறும் நிலை உருவாகி உள்ளது.