அவுஸ்ரேலியா நாட்டில் தீபாவளி திருநாளை அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆடல் பாடலுடன் வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தீபாவளி திருநாளை கொண்டாடினார்கள்.
செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். முன்னதாக மேளதாளம் முழங்க பெண்கள் தீபங்கள் ஏந்தியபடியே விருந்தினர்களை அழைத்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், கத்திச்சண்டை உள்ளிட்டவைகள் செய்து காட்டப்பட்டன. மேலும் இளைஞர் ஆடிய பல்வேறு வகையான நடனங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.