அவுஸ்திரேலியாவில் கஞ்சா வளர்க்க அனுமதி

கஞ்சாச் செடியை வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், பொறுப்பான அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா இறக்குமதிக்குப் பதிலாக அதை உள்ளூரிலே தயாரிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம்  அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

போதைப் பொருள் சட்டத்தின் அண்மைய திருத்தம் கடந்த மாதம் செய்யப்பட்டது. அறிவியல், மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாச் செடியை வளர்ப்பதற்குச் சட்டம் அனுமதிக்கிறது.

 

கஞ்சாவை மருந்தாக உட்கொள்கிறவர்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் சவால்களை எதிர்நோக்குவதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள திருத்தத்தால் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடு மேலும் சுலபமாகுதம் என்று அமைச்சு சொன்னது.