செய்திமுரசு

எழுக தமிழ்! கொள்கையை ஏற்றுக்கொண்டால் எவரும் வரலாம்

தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் பேரணியில் கலந்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை எந்த வித அரசியல் சார்பும் இன்றி அனைத்து தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளும் நிகழ்வே இதுவெனவும் அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையினில் நாளை நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எந்த வித அரசியல் ...

Read More »

ஐ.நா வில் அவுஸ்ரேலிய அகதிகள் பற்றி பேசப்பட்டது

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை எப்படி இறுக்கமாகப் பேணுவது என்பதை அவுஸ்ரேலியாவின் முன்னுதாரணத்திலிருந்து ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் Malcolm Turnbull மற்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton ஆகியோர் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நவுறு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் காணப்படும் நிலமைகள், படகுகளைத் திருப்பி அனுப்புதல், குறைந்தளவான அகதிகளை உள்வாங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் Save the Children, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பிரித்ததானியார்களே அதிகம்

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை அடிப்படையாக வைத்து எந்தெந்த வெளிநாடுகளில் பிறந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் அதிகம் வாழ்கிறார்கள் என்ற தரவு ஒன்றை சென்சஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிரித்ததானியா முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் இருக்கின்ற அதேநேரம் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது.

Read More »

அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா

தனக்கு அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளைஞர் கடத்தல் தொடர்பான வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தன்னை அறியாமல் இடம்பெற்ற ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் நடவடிக்கைகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு வராமல் தனது தொழிலையேசெய்து கொண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுவதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ...

Read More »

கடைகளைப் பூட்டி பேரணிக்கு ஆதரவு தாருங்கள் வணிகர்களிடம் பேரவை கோரிக்கை

தமிழ் மக்கள் பேரவையின் ஏற் பாட்டில் நாளை மறுதினம் சனிக் கிழமை (24-09- 2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும்வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறு வனங்களைப் பூட்டி பேரணிக்குஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக் கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் நேற்றிரவு விடுக்கப் பட்ட விசேட செய்திக்குறிப்பில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Read More »

‛சார்க்’ பாதுகாப்பு விவகார மாநாடு இன்று துவக்கம்

சார்க் அமைப்பிலுள்ள நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு டில்லியில் இன்று துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பாக்., தவிர பிற நாடுகள் அனைத்தும் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் நடத்தப்படவுள்ள சார்க் நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான மாநாடு டில்லியில் இன்று(22-09-16) துவங்குகிறது. இம்மாநாட்டில் பாக்., தவிர்த்து நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, ஆப்கன், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இரு நாள்களுக்கு நடைபெறும். இம்மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க் கூட்டமைப்பு நாடுகள் கலந்தாலோசிக்க உள்ளன. ஜம்மு ...

Read More »

காவிரி வரலாறு

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. ...

Read More »

தலைநிமிர்ந்து வாழ ! எழுக தமிழுக்கு அணி திரளுங்கள்!!

எமது அன்பிற்கினிய தமிழ் மக்களே! யுத்தம் முடிந்து சுமார் ஏழரை வருடங்கள் உருண்டோடிவிட்டது. நாங்கள் வாக்களித்து உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒன்றரைவருடம் ஆகிவிட்டது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளது. புதிய அரசாங்கம் இலங்கைத்தீவில் ஒரு நல்லாட்சியை உருவாக்கும் அது தமிழ் மக்களுக்குமான நல்லாட்சியாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இலங்கை தமிழ்மக்கள் தொடர்பாக முன்னைய அரசாங்கம் கொண்ட அதே நிகழ்ச்சி நிரல்களையே இந்த அரசாங்கமும் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்கள் பாரிய சிங்களக் ...

Read More »

அவுஸ்ரேலிய அரசு 900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைத்தது

900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை அவுஸ்திரேலிய அரசு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் முறைப்படி ஒப்படைத்தது. 2005-ம் ஆண்டு 8,40,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5½ கோடி) மதிப்புள்ள பழங்கால 3 அபூர்வ சிற்பங்களை இந்தியாவின் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நடத்தி வந்த கலைக்கூடத்தில் இருந்து அவுஸ்ரேலியாவின் தேசிய கலைக்கூடம் விலைக்கு வாங்கியது. இவற்றில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரித்தியங்கரா தேவி சிலை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வரும் கற்சிலை என்று ...

Read More »

சுமந்திரனின் சூட்சும பேச்சு

சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்பு காணப்படுகின்றதே தவிர சர்வதேச விசாரணையாளர்களுக்கு அல்லவென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணையாளர்களை கொண்டுவருவோம் என உறுதியாக தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை முல்லைத்தீவில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக கதைப்பதற்கு இன்னும் காலம் உள்ளதென்றும், தற்போது அது தொடர்பாக கதைத்து வரவிருக்கும் சர்வதேச விசாரணையாளர்களையும் இல்லாமல் செய்ய முடியாதென இதன்போது சுட்டிக்காட்டினார்.

Read More »