சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்பு காணப்படுகின்றதே தவிர சர்வதேச விசாரணையாளர்களுக்கு அல்லவென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணையாளர்களை கொண்டுவருவோம் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை முல்லைத்தீவில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக கதைப்பதற்கு இன்னும் காலம் உள்ளதென்றும், தற்போது அது தொடர்பாக கதைத்து வரவிருக்கும் சர்வதேச விசாரணையாளர்களையும் இல்லாமல் செய்ய முடியாதென இதன்போது சுட்டிக்காட்டினார்.
Eelamurasu Australia Online News Portal