‛சார்க்’ பாதுகாப்பு விவகார மாநாடு இன்று துவக்கம்

சார்க் அமைப்பிலுள்ள நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு டில்லியில் இன்று துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பாக்., தவிர பிற நாடுகள் அனைத்தும் பங்கேற்கின்றன.

இந்தியா சார்பில் நடத்தப்படவுள்ள சார்க் நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான மாநாடு டில்லியில் இன்று(22-09-16) துவங்குகிறது. இம்மாநாட்டில் பாக்., தவிர்த்து நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, ஆப்கன், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இரு நாள்களுக்கு நடைபெறும். இம்மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க் கூட்டமைப்பு நாடுகள் கலந்தாலோசிக்க உள்ளன.

ஜம்மு – காஷ்மீரிலுள்ள யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் பின்னணியில் பாக்., இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதை பாக்., மறுத்துள்ளது. இச்சம்பவம் காரணமாக சார்க் நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான மாநாட்டில் பாக்., கலந்து கொள்ளவில்லை என முடிவு செய்துள்ளது.