நாட்டின் எல்லைப் பாதுகாப்பை எப்படி இறுக்கமாகப் பேணுவது என்பதை அவுஸ்ரேலியாவின் முன்னுதாரணத்திலிருந்து ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் Malcolm Turnbull மற்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக நவுறு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் காணப்படும் நிலமைகள், படகுகளைத் திருப்பி அனுப்புதல், குறைந்தளவான அகதிகளை உள்வாங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் Save the Children, Oxfam, Vinnies’ National Council ஆகிய அமைப்புக்கள் அவுஸ்ரேலியா மீது குற்றம் சுமத்தின.
எனினும் தமது எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நியாயப்படுத்தியுள்ள பிரதமர் Malcolm Turnbull மற்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton ஆகியோர், ஆஸ்திரேலியாவின் முன்மாதிரியை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என அழைப்பு விடுத்தனர்.