யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலிய யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான அன்சாக் கிளாஸ் பிறிகேற் ரகத்தை சேர்ந்த அருண்ரா (ARUNTA) என்ற யுத்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 118 மீற்றர் நீளத்தையும் 14.8 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த கப்பலில் 24 அதிகாரிகள் உள்ளிட்ட 190 பேர் பணியாற்றுகின்றனர். கடற்படை சம்பிருதாயங்களுக்கமைவாக இந்த கப்பல் வரவேற்கப்பட்ட அதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் 4 நாட்கள் தங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்த்தக்கது
Read More »துன்னாலையில் பதற்றம்! வீதியில் ரயர் கொளுத்தி மக்கள் போராட்டம்!
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கரவெட்டி கலிகை சந்தி உள்ளிட்ட பகுதிகளினில் மக்கள் போராட்டங்களினில் குதித்துள்ளனனர்.துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக இரு காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமுள்ளனர். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வடமராட்சி கிழக்கு குடத்தனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று பிற்பகல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இசசம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்நிலையத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு ஒரு உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப காவல்துறை அதிகாரிகளான உப பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் ...
Read More »பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்!
பிரிஸ்டலில் நேற்று நடந்த அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 8 அணிகள் இடையிலான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்களே எடுக்க ...
Read More »அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் முதலிடம்!
அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான அவுஸ்ரேலியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 306.452 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் ...
Read More »அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களா நீங்கள்?
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்களின் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 53.3 வீதமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பெண்களின் எண்ணிக்கை 46.7 வீதம் எனக் கூறப்படுகிறது. இவர்களில் பதிவுத் திருமணம் செய்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 38,449 என்றும், அதேவேளை திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 18,507 என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி பேசுபவர்களில் 74.8 வீதமானோர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். 9.6 வீதமானவர்கள் கத்தோலிக்க மதத்தையும் 4.2 வீதமானவர்கள் இஸ்லாமையும் பின்பற்றுகின்றனர். மேலும் அவுஸ்ரேலியாவில் வாழும் ...
Read More »சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பாடகாராகிறார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த ஹர்பஜன் சிங் தற்போது மிதூன் இசையில் பாடல் ஒன்று பாட உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். 37 வயதாகும் இவருக்கு தற்போது இந்திய சீனியர் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல். தொடர், ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது ஹர்பஜன் சிங் பாடகராக அவதாரம் எடுக்க உள்ளார். இந்திய நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட உண்மையான ஹீரோக்களை போற்றும் ...
Read More »பள்ளி படிப்பை முடித்தார் மலாலா!
தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர்தப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் பள்ளி படிப்பை முடித்து, சமூக வலைத்தளமான டுவிட்டரிலும் இணைந்துள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில் குண்டு பாய்ந்த ...
Read More »அவுஸ்ரேலியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!
அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெண் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது. அவுஸ்ரேலியா நாட்டின் பெர்த் பகுதியில் வாழ்ந்து வரும் கிம், வான் டூசி தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே பிரசவத்தில் ஐந்து அழகான குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே இந்த குழந்தைகள் பிறந்திருந்தாலும் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போதுதான் இந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளன. இந்த குழந்தைகளின் அழகழகான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
Read More »அவுஸ்ரேலிய வீரர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு
ஐ.பி.எல் தொடரில் இரண்டாண்டுகள் தடையிலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தாண்டு பங்கேற்க உள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்னே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஜூன் மாதம் ஐ.பி.எல் போட்டிகளில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட இரண்டாண்டுகள் இடைகால தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகாலம் வருகிற ஜூலை 15-ம் திகதியோடு நிறைவடைகிறது. எனவே அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ளன. ...
Read More »