கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்களின் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 53.3 வீதமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பெண்களின் எண்ணிக்கை 46.7 வீதம் எனக் கூறப்படுகிறது. இவர்களில் பதிவுத் திருமணம் செய்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 38,449 என்றும், அதேவேளை திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 18,507 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழி பேசுபவர்களில் 74.8 வீதமானோர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். 9.6 வீதமானவர்கள் கத்தோலிக்க மதத்தையும் 4.2 வீதமானவர்கள் இஸ்லாமையும் பின்பற்றுகின்றனர்.
மேலும் அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் பேசுபவர்களின் பெற்றோரில் 99 சதவீதமானவர்கள் வெளிநாட்டிலேயே பிறந்துள்ளனர் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் 73,161 பேரில் 42, 581 அதாவது 58.2 வீதமானவர்கள் அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது