அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் முதலிடம்!

அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான அவுஸ்ரேலியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 306.452 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.

இதில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவரது 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 0.658 வினாடி மட்டுமே பின்தங்கிய முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வதாக வந்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார்.

அவுஸ்ரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ 3-வது இடத்தையும், இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்தையும் பிடித்தனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) ஆகியோர் முறையே 7-வது, 8-வது இடங்களை பெற்றனர்.

இதுவரை நடந்துள்ள 9 சுற்றுகள் முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 151 புள்ளிகளுடன 2-வதுஇடத்திலும், வால்டெரி போட்டாஸ் 136 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 10-வது சுற்று போட்டியான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி வருகிற 16-ந்தேதி சில்வர்ஸ்டோனில் நடக்கிறது.