துன்னாலையில் பதற்றம்! வீதியில் ரயர் கொளுத்தி மக்கள் போராட்டம்!

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கரவெட்டி கலிகை சந்தி உள்ளிட்ட பகுதிகளினில் மக்கள் போராட்டங்களினில் குதித்துள்ளனனர்.துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக இரு காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமுள்ளனர்.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வடமராட்சி கிழக்கு குடத்தனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று பிற்பகல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இசசம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்நிலையத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு ஒரு உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப காவல்துறை அதிகாரிகளான உப பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை துப்பாக்கி சூட்டினையடுத்து குறித்த முள்ளிப்பகுதியிலுள்ள காவல்நிலைய உப அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு. உள்ளிருந்த பொருட்களும் குழு ஒன்றினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.முன்னதாக காவல்துறை வாகனமும்; தாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் மரணத்தைக் கண்டித்து பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் கலிகை சந்திப்பகுதியில் பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.வீதியில் ரயர்கள் போட்டு கொழுத்தி போக்குவரத்தினை துண்டித்து மக்கள் போராட்டங்களினில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கினிலிருந்து சட்டவிரோதமாக மணலை அகழ முற்பட்டவர்கள் மீதே துப்பாக்கி பிரயேர்கம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.