பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்க கியூபா செல்ல மாட்டேன் என அவரது தங்கை மறுத்து விட்டார். கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலகநாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அவரை ‘கொடூர சர்வாதிகாரி’ என்ற வர்ணனையுடன் குற்றம் சாட்டியுள்ளார். மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோவின் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம்
ustralia’s citizenship test ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம் கொண்டுவரப்படலாமென The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடியுரிமை பெறும் ஒருவர் அதற்கான பரீட்சை ஒன்றை எழுத வேண்டுமென்பது நாமறிந்த விடயம். 20 கேள்விகளைக் கொண்ட இப்பரீட்சையில் ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட பல பொது அறிவுக் கேள்விகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இனிவரும் நாட்களில் ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சைக் கேள்விகளை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குடியுரிமைப் பரீட்சை எழுதும் ஒருவர் அவரது பின்னணி மற்றும் ...
Read More »அவுஸ்ரேலியப் பயங்கரவாதியைத் தாயகத்திடம் ஒப்படைக்க முயற்சி
அவுஸ்ரேலியாவில் அதிகம் தேடப்பட்டுவந்த பயங்கரவாதியான நீல் பிரகாஷ், துருக்கியில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை தாயகத்திடம் ஒப்படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது. ஐஸிஸ் பயங்கரவாதப் பிரிவுக்கு பிரகாஷ் ஆள் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஈராக்கின் மோசுல் நகரில் நடந்த சண்டையில் பிரகாஷ் கொல்லப்பட்டார் என்று கான்பெராவில் அறிவிக்கப்டபட்ட சில மாதங்களில் துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர். நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிரகாஷ் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தது. 23 வயது பிரகாஷ் சில வாரங்களுக்கு ...
Read More »யாழில் திலீபனின் நினைவு தூபியின் முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு
யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். அங்கு உரை நிகழத்திய ரெலோ இயக்கத்தின் தலைவர் சிவாஜிலிங்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் வீர மறவர்களிளிற்கும் ...
Read More »மகரந்த ஒவ்வாமையால் அவுஸ்ரேலியாவில் ஆறாவது நபர் மரணம்
அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரில், மகரந்த ஒவ்வாமையால், ஆஸ்துமா ஏற்பட்டதில், ஆறாவது நபர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியினால் ஏற்பட்ட கன மழையும், கடும் காற்றும் மகரந்த ஒவ்வாமை பரவுவதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கானோர் ஆஸ்துமாவால் அவதியுற்றனர். இன்னும் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சுகாதாரப் பிரிவு பேச்சாளர் தெரிவித்தார். மூவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் கூறப்பட்டது.
Read More »உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்- அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவுக்கு படகில் சட்டத்திற்கு புறம்பாக வந்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் என அந்நாட்டு எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் எந்த வகையிலும் படகு வழியிலான அகதிகள் வரவுக்கு இடமளிக்காது என அவுஸ்ரேலிய அரசு முன்பே எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல் விடுத்துள்ள எச்சரிக்கையில், அகதிகள் மீள் குடியேற்றம் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் ஒப்பந்தம் ஒரு முறை மட்டுமே இடம்பெறும் தீர்வாகும். ...
Read More »கவாஜா சதத்தால் முன்னிலை பெற்றது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடியெல்டு நகரில் பகல்–இரவு மோதலாக நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்களுடன் திடீரென ‘டிக்ளேர்’ செய்தது. கப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 118 ரன்கள் விளாசினார். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்ரேலியா தொடக்க நாள் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2–வது நாளான நேற்று ...
Read More »காஸ்ட்ரோ தொடர்பாக ட்ரம்ப் மாற்றுக் கருத்து
கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார். காஸ்ட்ரோ பற்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி என குறிப்பி்ட்டிருக்கிறார். கியூபா மக்களை அறுபது ஆண்டுகளாக ஒடுக்கி வைத்திருந்தவர் காஸ்ட்ரோ என்றும், தனது தாய் நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட வழங்க மறுத்தவர் பிடல் என்றும் ட்ரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார். காஸ்ட்ரோ ஏற்படுத்திய சோகம், ...
Read More »அவுஸ்திரேலியாவில் “தியாகத் திருவொளிகள்” இசைத்தொகுப்பு வெளியீடு!
தியாகத் திருவொளிகள் – 02 உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் மாவீரர் நாள் – 2023 இல், மாவீரர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது. தங்களது உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் இன்றைய நாளில், அவர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பை மாவீரர் நாள் – 2023 இல் வெளியிட்டு வைக்கின்றோம். தமிழீழத் தாயகத்தில் ...
Read More »கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்
கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக் குறைவு காரணமாக பிடல் காஸ்ட்ரோ உயிரிழந்ததாக அவரது சகோதரரும், கியூப அதிபருமான ரால் காஸ்ட்ரோ அரசு தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு அறிவித்துள்ளார். ராணுவ ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக புரட்சி செய்து கியூபாவில் கம்யூனிஸ ஆட்சியை மலர செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. இந்த புரட்சியின் போது சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து செயல்பட்டனர். 1959 முதல் 2008-ம் ஆண்டு வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் கியூபாவை ஆட்சி செய்து ...
Read More »