அவுஸ்ரேலியாவில் அதிகம் தேடப்பட்டுவந்த பயங்கரவாதியான நீல் பிரகாஷ், துருக்கியில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை தாயகத்திடம் ஒப்படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது.
ஐஸிஸ் பயங்கரவாதப் பிரிவுக்கு பிரகாஷ் ஆள் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஈராக்கின் மோசுல் நகரில் நடந்த சண்டையில் பிரகாஷ் கொல்லப்பட்டார் என்று கான்பெராவில் அறிவிக்கப்டபட்ட சில மாதங்களில் துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர்.
நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிரகாஷ் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தது. 23 வயது பிரகாஷ் சில வாரங்களுக்கு முன் துருக்கியப் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.