தியாகத் திருவொளிகள் – 02
உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் மாவீரர் நாள் – 2023 இல், மாவீரர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது.
தங்களது உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் இன்றைய நாளில், அவர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பை மாவீரர் நாள் – 2023 இல் வெளியிட்டு வைக்கின்றோம்.
தமிழீழத் தாயகத்தில் பாடல்வரிகளை எழுதி, அங்கேயே இசையமைத்து சில பாடல்களையும், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை இணைத்து இன்னும் சில பாடல்களையும் சிட்னி மற்றும் மெல்பேர்ண் பாடகர்களின் குரலில், புதிய இசைத்தொகுப்பாக உங்கள் முன் தவளவிட்டுள்ளோம்.
எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை சவால்கள் எதிர்கொண்டாலும் சத்தியமே வாழ்வாக கொண்டு, சத்தியத்திற்காக மரணித்துப்போன மாவீரர்களை, நினைவிற் கொண்டு,
குரலடங்கிப்போயுள்ள எமது தேசத்தின் குரலாக,
தாயகமக்களுடன் இணைந்து, அவுஸ்திரேலிய தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக, தியாகத் திருவொளிகள் என்ற இப்பாடல் தொகுப்பை உங்கள் முன்கொண்டுவருவதில் நிறைவடைகின்றோம்.
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா
பாடல் இணைப்புகள்
பாடல்வரிகள்: வன்னியூர் வரன் (தாயகம்) இசை: இசையவன் உரும்பையூரான் (தாயகம்) பாடல்: தாயகப்பாடகர் தேவா (சிட்னி) பாடல்வரிகள்: உரும்பையூரான் (தாயகம்) இசை: இசையவன் உரும்பையூரான் (தாயகம்) பாடல்: இசையாழன் (ஜெய்கரன் – சிட்னி) பாடல்வரிகள்: பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் (புலம்) இசை: இசையவன் உரும்பையூரான் (தாயகம்) பாடல்: பிரசாத் (மெல்பேர்ண்) பாடல்வரிகள்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) இசை: இசை சதீஸ் (தமிழ் நாடு) பாடல்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) பாடல்வரிகள்: பொன் காந்தன் (தாயகம்) இசை: இசையவன் உரும்பையூரான் (தாயகம்) பாடல்: தாயகப்பாடகர் தேவா (சிட்னி) பாடல்வரிகள்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) இசை: இசை சதீஸ் (தமிழ் நாடு) பாடல்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) பாடல்வரிகள்: உரும்பையூரான் (தாயகம்) இசை: இசையவன் உரும்பையூரான் (தாயகம்) பாடல்: இசையாழன் (ஜெய்கரன் – சிட்னி) பாடல்வரிகள்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) இசை: இசை சதீஸ் (தமிழ் நாடு) பாடல்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) பாடல்வரிகள்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) இசை: இசை சதீஸ் (தமிழ் நாடு) பாடல்: SR சுரேஸ் (மெல்பேர்ண்) மற்றும் S சோபியா பாடல்வரிகள்: பொன் காந்தன் (தாயகம்) இசை: இசையவன் உரும்பையூரான் (தாயகம்) பாடல்: தாயகப்பாடகர் தேவா (சிட்னி)தியாகத் திருவொளிகள் – 01
அவுஸ்திரேலிய தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக “தியாகத் திருவொளிகள்” என்ற பாடற்தொகுப்பு (27-11-2006)வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே
காலப்பெருவெளியின் வரலாற்றில் உயிர்ப்பான நிலைபெற்றுவிட்ட, எமது மாவீரர்களின் தியாகங்களே, எமது மக்களின் விடுதலைக்கான பாதைகளை வழிப்படுத்தி நெறிப்படுத்தி நிலைப்படுத்தி வைத்திருக்கின்றது.
தங்களது உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் இன்றைய நாளில், அவர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள்” என்ற ஒலிப்பதிவு நாடாவை வெளியிட்டு வைக்கின்றோம்.
தமிழீழ தாயகத்தில் பாடல்வரிகளை எழுதி, அங்கேயே இசையமைத்து சில பாடல்களையும், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை இணைத்து இன்னும் சில பாடல்களையும் கோர்வையாக்கி, புதிய இசைத்தொகுப்பாக உங்கள் முன் தவளவிட்டுள்ளோம்.
எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை சவால்கள் எதிர்கொண்டாலும் சத்தியமே வாழ்வாக கொண்டு, சத்தியத்திற்காக மரணித்துப்போன மாவீரர்களை, நினைவிற் கொண்டு,
குரலடங்கிப்போயுள்ள எமது தேசத்தின் குரலாக,
தாயகமக்களுடன் இணைந்து, அவுஸ்திரேலிய தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக, தியாகத் திருவொளிகள் என்ற இப்பாடல் தொகுப்பை உங்கள் முன்கொண்டுவருவதில் நிறைவடைகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
பாடல் இணைப்புகள்
பாடல்வரிகள்: தீபச்செல்வன் இசை: தாயக இசையமைப்பாளர் பாடல்: சஜிந்தன் பாடல்வரிகள்: லக்ஷ்மி நாகேஸ்வரன் இசை: பிரியன் தம்பிராஜா பாடல்: பானுகா பாடல்வரிகள்: தர்மர் ரவி இசை: இசைப்பிரியன் பாடல்: நிமல் தயாரிப்பு: மெல்பேர்ண் கலைஞர்கள் பாடல்வரிகள்: பிரசாந்த் இசை: பிரசாந்த் பாடல்: பிரசாந்த் & சஜிந்தன் தயாரிப்பு: மெல்பேர்ண் கலைஞர்கள் தயாரிப்பு: மெல்பேர்ண் கலைஞர்கள் தயாரிப்பு: மெல்பேர்ண் கலைஞர்கள்