அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரில், மகரந்த ஒவ்வாமையால், ஆஸ்துமா ஏற்பட்டதில், ஆறாவது நபர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியினால் ஏற்பட்ட கன மழையும், கடும் காற்றும் மகரந்த ஒவ்வாமை பரவுவதற்குக் காரணமாயின.
ஆயிரக்கணக்கானோர் ஆஸ்துமாவால் அவதியுற்றனர். இன்னும் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சுகாதாரப் பிரிவு பேச்சாளர் தெரிவித்தார். மூவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் கூறப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal