செய்திமுரசு

குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்…..!

தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் கோட்டாபயவின் அரசு தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமராட்சி-கலிகையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் மிருசுவில் படுகொலையாளி இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றமே செய்யாத பல தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் வாடுகின்றனர். நல்லாட்சி அரசில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர், இன்று ...

Read More »

ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?

“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும் மேலான அரசாட்சிக் கலையைப் பொருத்தவரையில், அதற்குச் சற்றும் தகுதியோ திறமையோ அற்ற மோசடிக் கூட்டமொன்றையே நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். “ -பிளேட்டோ வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா ? என்று அவர் ...

Read More »

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகம் விற்பனையில் சாதனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) விமர்சித்து அவரது அண்ணனின் மகளான மேரி ட்ரம்ப் எழுதியுள்ள புத்தகம் ‘Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man‘ ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்த குறித்த புத்தகமானது அன்றைய தினமே முற்பதிவு விற்பனை, இ-புத்தகம் மற்றும் ஓடியோ என 9,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப் புத்தகத்தில் ட்ரம்ப்பை மோசமானவராக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சுகாதார, பாதுகாப்பு சட்டங்கள் மீறப்படுகின்றனவா?

கொரோனா பெருந்தொற்று பரவிவரும் இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவின் குடியேற்ற தடுப்பு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சாத்தியமற்றதாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் தலையிடுமாறு பணியிட ஒழுங்கினைக் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய அரசத் துறையான ‘Comcare’யை ஆஸ்திரேலிய வழங்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நெரிசல்மிக்க குடியேற்ற தடுப்பு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியமற்றதாக உள்ளதால், இம்மையங்கள் ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் பாதுகாப்பு(Health and Safety) சட்டங்களை மீறுபவையாக உள்ளன என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு ...

Read More »

யாழில் சிங்கள மாணவன் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணத்தில் இரு மாணவர்கள் மத்தியிலான மோதலை தடுக்க முயன்ற சிங்கள மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள தனியார் வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்த இரு தமிழ் மாணவர்கள் தங்களுக்குடையில் மோதிக்கொண்டவேளை அதனை தடுக்க முயன்ற சிங்களமாணவன் கத்திக்குத்து இலக்காகியுள்ளார். இரு மாணவர்கள் மோதிக்கொண்டவேளை ஒரு மாணவன் மற்றைய மாணவனை கத்தியால் குத்த முயன்றதாகவும் இதனைபார்த்த சிங்களமாணவன் குறுக்கே பாய்ந்து தடுக்க முற்பட்டவேளை கழுத்தில் காயமடைந்தான் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த மாணவன் ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (18) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வ இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. விஞ்ஞாபனம் வருமாறு, வரலாற்றுப் பின்னணி அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய ...

Read More »

20 நிமிடங்களில் கொரோனாத் தொற்றுப் பரிசோதனை -அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

கொரோனாத் தொற்றை 20 நிமிடங்களில், உறுதி செய்யும் பரிசோதனையை அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெல்பேர்ன் நகரில் உள்ள Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் செயற்பாட்டின் மூலம் கொரோனாத் தொற்றை உறுதி செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர். ஒரு துளி இரத்தத்தில், மேற்கொள்ளப்படும் இப் பரிசோதனை மூலம், தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது மட்டுமின்றி, இதற்கு முன் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரா என்பதையும் கண்டறிய முடியும் என அந் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

கொரோனா வைரஸ் நோயாளிகள் குறித்த உண்மையை அரசாங்கம் மறைக்கின்றது

கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மறைக்கின்றது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அரசாங்கம் வாக்குவேட்டைக்காக பயன்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் நோக்கம் காரணமாக விஞ்ஞானம் புறக்கணிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இதுவே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகயிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்நோக்கங்கள் விஞ்ஞானத்தை ஆதிக்கம் செய்கின்றனஎன பிமல்ரட்நாயக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வுகூடத்தினால் ...

Read More »

கொலை செய்யும் திட்டத்துடன் நடமாடிய சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது!

யாழில், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் செயற்பட்ட சந்தேகநபரை யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்ப்பட்ட நபர் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 22 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள நிலையில் குறித்த நபர் காவல் துறையால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், குறித்த நபர் வவுனியாவில் ...

Read More »

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஏற்பாட்டில் ஐ.நா. வில் கல்வி கருத்தரங்கம்

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் ACCP இணைந்து, அடுத்த ஆண்டு 2021 ல் உயர் கல்விக்கான கல்வி கருத்தரங்கம் 2021 நடைபெறவுள்ளது. அந்நிகழ்வை முன்னிட்டு முதல் ஆலோசனை கூட்டம் இணைய வழியில் ZOOM ல் ஜூலை 18 சனிக்கிழமை இந்திய- இலங்கை நேரப்படி மாலை 6.00 மணி மற்றும் கனடா நேரம் காலை 8.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் தமிழக அரசு முதன்மை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் மற்றும் வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினியின் அமைச்சர் முத்துவேல் சசிதரன், ...

Read More »