கொரோனாத் தொற்றை 20 நிமிடங்களில், உறுதி செய்யும் பரிசோதனையை அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மெல்பேர்ன் நகரில் உள்ள Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் செயற்பாட்டின் மூலம் கொரோனாத் தொற்றை உறுதி செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.
ஒரு துளி இரத்தத்தில், மேற்கொள்ளப்படும் இப் பரிசோதனை மூலம், தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது மட்டுமின்றி, இதற்கு முன் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரா என்பதையும் கண்டறிய முடியும் என அந் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal