கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மறைக்கின்றது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அரசாங்கம் வாக்குவேட்டைக்காக பயன்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்தும் நோக்கம் காரணமாக விஞ்ஞானம் புறக்கணிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இதுவே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகயிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்நோக்கங்கள் விஞ்ஞானத்தை ஆதிக்கம் செய்கின்றனஎன பிமல்ரட்நாயக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வுகூடத்தினால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை தோற்கடித்த உலகின் முதல்நாடு இலங்கை என காண்பிப்பதற்காக உண்மைமறைக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.