உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் ACCP இணைந்து, அடுத்த ஆண்டு 2021 ல் உயர் கல்விக்கான கல்வி கருத்தரங்கம் 2021 நடைபெறவுள்ளது. அந்நிகழ்வை முன்னிட்டு முதல் ஆலோசனை கூட்டம் இணைய வழியில் ZOOM ல் ஜூலை 18 சனிக்கிழமை இந்திய- இலங்கை நேரப்படி மாலை 6.00 மணி மற்றும் கனடா நேரம் காலை 8.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் தமிழக அரசு முதன்மை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் மற்றும் வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினியின் அமைச்சர் முத்துவேல் சசிதரன், மலேசியாவின் முன்னாள் துணை கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் மற்றும் சுதா சேஷய்யன், சாஸ்திரி, மற்றும் அரசு துணைவேந்தர்கள் 16 பேரும், பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் 4 பேரும் ஆலோசனை வழங்க உள்ளனர்.
இந்நிகழ்வை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் முன்னிலையில், நெறியாளர் ஜான் தன்ராஜ் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்வில் நோக்கம் அடுத்த தலைமுறைக்கு உயர் கல்வியில் புதிய பாட திட்டங்களை உலகறிய செய்யவும், புதிய யுக்திகளை எப்படி கையாளுவது எதிர்பாராத கால நிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாட திட்டங்களை அறிமுகப்படுவதற்கான ஆலோசனை கூட்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பல்வேறு நாட்டு 25க்கும் மேற்பட்ட தமிழ் சமூக ஊடகங்கள் நேரலை செய்கின்றன.
இந்நிகழ்வை அனைவரும் நேரலையாக க ண்டுகளிக்க இந்த அகப்பக்கத்தை கிளிக் செய்யவும்:
www.GOTOORGANISATION.cb.tc
Eelamurasu Australia Online News Portal