அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) விமர்சித்து அவரது அண்ணனின் மகளான மேரி ட்ரம்ப் எழுதியுள்ள புத்தகம் ‘Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man‘ ஆகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்த குறித்த புத்தகமானது அன்றைய தினமே முற்பதிவு விற்பனை, இ-புத்தகம் மற்றும் ஓடியோ என 9,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப் புத்தகத்தில் ட்ரம்ப்பை மோசமானவராக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.