செய்திமுரசு

இராணுவத் தளபதி- போலந்து தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி சந்திப்பு!

சிறிலங்காவிற்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.இந்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இருவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவு மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் நினைவுச்சின்னங்களையும் பரஸ்பரமாக பரிமாறிக்கொண்டனர்.

Read More »

மன்னார் மனித புதைகுழியில் 197 எலும்புக்கூடுகள்!

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன் மழை பெய்கின்றபோதும் இவ் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழை வாயில் பகுதியில் ச.தொ.ச விற்பனை நிலையம் ஒன்று அமைக்கும் நோக்குடன் அதற்கான கட்டுமானப்பணி வேலைகள் நடைபெற்ற வேளையில் அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இவ் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று வரை வெள்ளிக்கிழமை வரை 95 ...

Read More »

சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு முதல் வீரரை அனுப்ப பாகிஸ்தான் திட்டம்!

பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன்முதலாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் சீனாவின் உதவியுடன் 2022-ல் நிறைவேற்றப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 செயற்கைகோள்களை சீனாவின் ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்ப ...

Read More »

நுட்பமான கொலை திட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய காதலி!

பத்திரிகையாளர் படுகொலை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்தால் பாதிக்கப்படுவோர் ஆயுதத்தை கையில் எடுக்கும் போது அங்கு மரணிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரமும், ஒரு குடும்பத்தின் எதிர்காலமும்.அப்படிப்பட்டது தான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி, 59, படுகொலையும். ஆனால் நேரடியாக மன்னரும், இளவரசரும் சுட்டிக்காட்டப்படுவதால் உலகின் பார்வை முழுதும் அந்த சம்பவத்தில் பதிந்துள்ளது.கொலை சம்பவம் ஹாலிவுட் படங்களில் வரும் கதையைப்போன்று திட்டமிட்ட படுகொலை என்கின்றன, துருக்கி நாளிதழ்கள். இந்த பிரச்னையில் நுாலிழையில் துருக்கி தப்பியுள்ளது. இல்லையேல் அவர்கள்தான் சிக்கலில் மாட்டியிருப்பார்கள். அரசருடன் நட்பு ஜமாலின் துவக்க ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வெடி விபத்து: 4 இலங்கையர்கள் படுகாயம்!

அவுஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவம் ஒன்றில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றிற்காக உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த உணவகத்திலிருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்தமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கான்பராவிலுள்ள உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை!

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார். தமிழ்தேசிய கூட்ட மைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றார். இந்த கட்சி அறிவிப்பு கூட்டம் நேற்று நல்லூர் ஆலய சுற்றாடலில் உள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் ...

Read More »

புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டம் நடைமுறையில் உள்­ளதை விட­வும் ஆபத்தானது!

புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டம் தற்­போது நடை­மு­றை­யில் உள்­ளதை விட­வும் ஆபத்­தா­னது என்று தெரி­வித்­துள்­ளது முன்­னிலை சோச­லி­சக் கட்சி. கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ளர் புபுது ஜகொட இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது- நாட்­டின் பயங்­க­ர­வாத செயல்­க­ளுக்கு எதி­ரா­க­வும், பயங்­க­ர­வா­தத்­து­டன் இணைந்த செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­கா­க­வும், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதைப் பார்க்­கி­லும் தற்­போது கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மா­னது நீதிக்கு எதி­ரா­னது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை தடை செய்­தல் ...

Read More »

“றோ” குறித்து வாய்த்திறந்தார் மஹிந்த!

இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” தொடர்பில், கருத்துமோதல்களில் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள நிலையில், ​​​“றோ” தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ கருத்துரைத்துள்ளார். ​​​“இந்தியாவின் “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருப்பார்களாயின், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டுமென, மஹிந்த ராஜபக்‌ஷ கோரியுள்ளார். தங்கல்ல, ஹேனகடுவ விஹாரைக்கு, நேற்று (24) வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, மத வழிபாடுகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த அரசாங்கத்துக்கு எந்நாளும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. “றோ” புலனாய்வுச் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 33 புகலிடக் கோரிக்கையாளரின் படகுகள்!

கடந்த 5 ஆண்டுகளில் 33 படகுகள் கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது அல்லது திருப்பியனுப்பப்பட்டதாக தி அவுஸ்திரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2525 பேர் அவுஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் ...

Read More »

இயற்கை முறையில் பிறந்தநாள் கொண்டாடிய கோவை சிறுமி!

கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். கோவையில் இயங்கி வரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பவர் சுரேஷ். இவருடைய மகள் சான்வி தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில், சான்வியின் பிறந்தநாளை இயற்கை முறையில் கொண்டாடும் விதமாக, சுரேஷின் வீட்டில் செய்த நிலக்கடலை உருண்டை, ஒரு துணிப்பை மற்றும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியதன் ...

Read More »