அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 33 புகலிடக் கோரிக்கையாளரின் படகுகள்!

கடந்த 5 ஆண்டுகளில் 33 படகுகள் கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது அல்லது திருப்பியனுப்பப்பட்டதாக தி அவுஸ்திரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதில் 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 2525 பேர் அவுஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott இன் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட Operation Sovereign Borders நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.