செய்திமுரசு

மஹிந்தவுக்கு எதிராக மற்றுமோர் மனு!

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கி­விட்டு மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மை­யா­னது சட்­டத்­துக்கு எதி­ரா­னது என உத்­த­ர­விடக் கோரி  உயர் நீதி­மன்­றத்தில் மற்­றொரு அடிப்­படை உரிமை மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.   குறித்த மனுவை தம்­பர அமில தேரர் இந்த தாக்கல் செய்­துள்ளார். மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட 53 பேர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கி­விட்டு மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்க ஜனா­தி­பதி ...

Read More »

மாவீரர் நாள் 2018 – மெல்பேர்ண்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் 27 – 11 – 2018 செவ்வாய்க்கிழமை மெல்பேர்ண் ஸ்பிறிங்வேல் நகரமண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களான திரு பிரசாத் அவர்கள் தமிழிலும் செல்வி லக்சிகா அவர்கள் ஆங்கிலத்திலும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் 2ம் லெப்ரினன்ட் அருமைநாயகியின் சகோதரன் திரு ஜேசுதாசன் செல்வராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு முரளீதரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழ் ...

Read More »

மாவீரர் நாள் 2018 – சிட்னி

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சஞ்சயன் அவர்களும், மாவீரர் லெப். கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி அவர்களும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் கப்டன் வெண்மதி அவர்களின் சகோதரர் தர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை நாட்டுப்பற்றாளர் விஜயகுமாரின் துணைவி புவனேஸ்வரி ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் குமரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் சிட்னி ...

Read More »

அவுஸ்திரேலிய காவல் துறைக்கு உதவியாக இராணுவத்தினர்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவசரகால தருணத்தில் மாநில அரசுகள் காவல் துறைக்கு  மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாநில காவல் துறை படைக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தின் உதவி தேவை என்று மாநில அரசு கருதுமானால் பாதுகாப்பு அமைச்சு அதனை சாதகமாக பரிசீலிக்கலாம். அதற்கேற்றவாறு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக Greens கட்சி கருத்து தெரிவிக்கும்போது, ‘எதேச்சாதிகாரத்தை நோக்கி அவுஸ்திரேலியா செல்வதை எடுத்துக்காட்டும் சட்டம்தான் இது’ என்று கண்டித்துள்ளது. இதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் ...

Read More »

சிட்னியில் வரலாறு காணாத கனமழை – ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் இன்று காலை முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இன்று ஒரே நாளில் பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிட்னி நகரில் உள்ள சுரங்க புகையிரதங்கள் மற்றும் புகையிரதங்கள், மற்றும் , ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேற அறிமுகமாகும் புதிய விசா!

தெற்கு அவுஸ்திரேலிய மாநில அரசு புதிய பிரிவு விசா ஒன்றை பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்தவாரம் முதல் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய entrepreneurs – தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய விசாமுறையின் கீழ் – தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய தொழில்துறையை ஆரம்பிக்கும் திட்டத்தை மாநில அரசாங்கத்தின் ...

Read More »

பொதுக்குரல் என்பது சாதியத்திலிருந்து வராது! – எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேட்டி

இலக்கியவாதிகள் அனைவருக்குமே எழுதுவதற்கான சூழல் அமைந்துவிடுவதில்லை. விமர்சன உலகின் மௌனம், நிரந்தரமற்ற பணிச்சூழலுக்கு இடையே முக்கியமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் எஸ்.செந்தில்குமார். நகைத் தொழிலாளிகளின் வரலாறு பேசும் ‘காலகண்டம்’, ஆடு வளர்க்கும் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் ‘மருக்கை’ இரண்டும் இவரது முக்கியமான நாவல்கள். ஸ்பாரோ இலக்கிய அமைப்பு வழங்கும் இந்த ஆண்டுக்கான எழுத்தாளர் விருது எஸ்.செந்தில்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகால நெடிய தமிழ் இலக்கிய மரபில் புகுந்து வேர் பிடித்திருக்கும் களைகளாகச் சில விஷயங்களை இந்தப் பேட்டியில் கோடிகாட்டுகிறார். அற்புதத்தன்மை கொண்ட கதை வடிவத்தை ...

Read More »

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் –  பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவரின் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகளை அடித்து நெருக்கியுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் சுப்பர்மட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு தமது துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ...

Read More »

மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்!

பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாட்டின் கெட்டியான கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் இத்தகைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான ...

Read More »

பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க!

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, “கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் ...

Read More »