யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவரின் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகளை அடித்து நெருக்கியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் சுப்பர்மட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு தமது துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய போதும் மக்கள் கலைந்து செல்லாது நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இரவோடு இரவாக பருத்தித்துறை காவல் துறை நிலைத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் காவல் துறை வீட்டிற்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டதுடன் தாம் தற்போது யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Eelamurasu Australia Online News Portal