அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவசரகால தருணத்தில் மாநில அரசுகள் காவல் துறைக்கு மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாநில காவல் துறை படைக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தின் உதவி தேவை என்று மாநில அரசு கருதுமானால் பாதுகாப்பு அமைச்சு அதனை சாதகமாக பரிசீலிக்கலாம்.
அதற்கேற்றவாறு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக Greens கட்சி கருத்து தெரிவிக்கும்போது,
‘எதேச்சாதிகாரத்தை நோக்கி அவுஸ்திரேலியா செல்வதை எடுத்துக்காட்டும் சட்டம்தான் இது’ என்று கண்டித்துள்ளது.
இதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசானது ஏதாவது ஒரு அவசர தருணங்களில் தன்னால் கட்டுப்படுத்தமுடியாதென கருதினால் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவசர கால பிரகடனம் ஒன்றை அறிவிக்கும்.
இதனையடுத்தே இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்ற முறைமை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.