மஹிந்தவுக்கு எதிராக மற்றுமோர் மனு!

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கி­விட்டு மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மை­யா­னது சட்­டத்­துக்கு எதி­ரா­னது என உத்­த­ர­விடக் கோரி  உயர் நீதி­மன்­றத்தில் மற்­றொரு அடிப்­படை உரிமை மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

குறித்த மனுவை தம்­பர அமில தேரர் இந்த தாக்கல் செய்­துள்ளார்.

மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட 53 பேர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கி­விட்டு மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்க ஜனா­தி­பதி எடுத்த தீர்­மானம் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு எதி­ரா­னது என்று அந்த மனுவில் கூறப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக ஜனா­தி­ப­தியின் இந்த செயற்பாடு தமது அடிப்படைய உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.