மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்!

பெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாட்டின் கெட்டியான கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் இத்தகைய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான எரிபொருள் தயாரித்துள்ளது.

இதன்மூலம் எரிபொருள் தயாரிப்புக்கான செலவு குறைவாக உள்ளது. எனவே வருகிற 2035-ம் ஆண்டில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.