சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பலமட்டத்தில் எழுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கிய பதினெட்டு மாத அவகாசத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக் கொண்டிருந்த விடயங்களின் நடைடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணிக்கின்றது. வரும் பெப்ரவரி 27ம் நாள் தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இக்காலக்கெடு நிறைவடைகின்றது. இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இப்பன்னாட்டுக்குழுவின் அறிக்கை வெளிவரவிருக்கின்றது. அனைத்துலக ...
Read More »செய்திமுரசு
விடுதலை புலிகளின் தங்கத்தை தேடுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட விசேட இயந்திரம்
விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகை தங்கத்தை தேடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 40 லட்சம் பெறுமதியான விசேட ஸ்கேனர் இயந்திரத்துடன் நான்கு பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 அடி ஆழத்தில் உள்ள திடமான பொருட்கள் தொடர்பில் இந்த இயத்திரத்தின் ஊடாக தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் இந்த இயந்திரத்தை மோட்டார் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, குற்றப் புலனாய்வு பிரிவினர் கூறி செட்டிக்குளம் பிரதேசத்தில் திருவதற்காக சென்ற குழுவினர் தொடர்பிலும் பொலிஸார் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read More »காணாமல்போனோர் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாதாம்!
காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளை தோற்கடித்து அற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன, சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன, குறிப்பிட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.
Read More »அவுஸ்ரேலியப் பிரதமரை ‘அதிபர்’ ஆக்கிய அமெரிக்கா!
அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை ‘அதிபர்’ என்று வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ளது. அகதிகள் குறித்து திரு டர்ன்புல்லுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் தொலைபேசியில் சூடான கலந்துரையாடல் நடந்த சில நாட்களில் அந்தப் பிழை நடந்திருக்கிறது. அமெரிக்க ஊடகச் செயலாளர் அலுவலகத்தின் அறிக்கை, வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கூறிய திரு டிரம்ப், தமது உறுதியை நிறைவேற்றியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. 16 உலகத் தலைவர்களுடன் டிரம்ப் உரையாடியதாகவும் அறிக்கை ...
Read More »மட்டு எழுக தமிழில் அனந்தி கலந்துகொள்ளத் தீர்மானம்!
மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பூ.லக்ஸ்மன் அவர்களுக்கும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் இடையில் நேற்று மாலை யாழ் நகரில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் காணாமல் போனவர்களுக்கானதும் இறுதி யுத்த காலப்பகுதியில் படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான தீர்வையும் நீதியையும் வலியுறுத்தி எழுக தமிழ் ...
Read More »போராட்ட வடிவம் மாற்றமடையும்; கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை!
சொந்தக் காணிகளை தம்மிடம் வழங்குமாறு கோரி இன்று (7) கேப்பாப்புலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கேப்பாப்புலவு மக்கள் இரவு, பகலாக இராணுவ முகாமுக்கு முன்னால் தகரப் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் மக்களுடன் அவர்களது பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது கல்வி நடவடிக்கை தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நாளைய தினத்திற்குள் தமது போராட்டத்திற்கு எந்தத் தீர்வும் ...
Read More »அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும்?
அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும் என்று அகதிகள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது. அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு, சிரிய அகதிகளுக்கு தடை, ஏழு முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை உள்ளிட்ட முடிவுகளை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அகதிகள் ஒப்பந்தம் *அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் நவம்பர் 2016 அறிவிக்கப்பட்டது. இது ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டம். *இது ...
Read More »காரைநகரில் 3.25 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள்
வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேன்படுத்தும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் இன்று (6)யாழ் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் உதவியுடனும் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் 3.25 மில்லியன் ரூபாயில் கசூரினா கடற்கரையில் சுற்றுலாப்பயனிகளுக்கான நிழல் தரிப்பிடங்கள் 20,மற்றும் சுற்றுலாப்பயனிகளின் நலன் கருதியாக இருப்பிட,மற்றும் தங்குமிட வசதிகள் 16 மற்றும் கடல்வள சுற்றுச்சூழல் மேன்பாடு வேலைத்திட்டம் என்ப இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.. கடந்த காலங்களில் யாழ் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை ...
Read More »அவுஸ்ரேலியா தொடரை எதிர்பார்க்கும் ரோகித் சர்மா
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் அவருக்கு டெஸ்ட் தொடரில் சரியான இடம் கிடைக்கவில்லை. கடந்த வருடம் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு, கடைசி போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டார். ...
Read More »அவுஸ்ரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்ரேலியாவிற்கு அந்த இடத்தை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அவுஸ்ரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்றுள்ளது. மிகத்துள்ளியமான புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்ரேலியா முதல் இடம்பிடித்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ...
Read More »