வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேன்படுத்தும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் இன்று (6)யாழ் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் உதவியுடனும் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் 3.25 மில்லியன் ரூபாயில் கசூரினா கடற்கரையில் சுற்றுலாப்பயனிகளுக்கான நிழல் தரிப்பிடங்கள் 20,மற்றும் சுற்றுலாப்பயனிகளின் நலன் கருதியாக இருப்பிட,மற்றும் தங்குமிட வசதிகள் 16 மற்றும் கடல்வள சுற்றுச்சூழல் மேன்பாடு வேலைத்திட்டம் என்ப இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது..
கடந்த காலங்களில் யாழ் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை ப்பகுதிக்கு வரும் சுற்றுலாத்துறை யினார்கள் பல்வேறு இடையூறுகளையும்,மற்றும் பல்வேறு குறைபாடுகளை காரைநகர் பிரதேச சபைக்கு சுட்டிக்காட்டி இருந்தனர் . அவற்றினை கவனத்தில் கொண்டுள்ளபட்டே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.