அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை ‘அதிபர்’ என்று வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ளது.
அகதிகள் குறித்து திரு டர்ன்புல்லுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் தொலைபேசியில் சூடான கலந்துரையாடல் நடந்த சில நாட்களில் அந்தப் பிழை நடந்திருக்கிறது.
அமெரிக்க ஊடகச் செயலாளர் அலுவலகத்தின் அறிக்கை, வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கூறிய திரு டிரம்ப், தமது உறுதியை நிறைவேற்றியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. 16 உலகத் தலைவர்களுடன் டிரம்ப் உரையாடியதாகவும் அறிக்கை கூறியது.
அந்தப் பதினாறு தலைவர்களின் வரிசையில் அவுஸ்ரேலியப் பிரதமருக்குப் பதிலாக ‘அவுஸ்ரேலிய அதிபர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.அத்துடன், பிரதமரின் பெயரும் அதில் காணவில்லை.இது குறித்து அவுஸ்ரேலிய மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
பிழையை வெள்ளை மாளிகை பின்னர் திருத்திக்கொண்டது.