காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளை தோற்கடித்து அற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன, சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன, குறிப்பிட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.